சட்ட விரோதமாக சாராய ஊழலை பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மல்லிகை பாடி வனப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே கிராமத்தில் வசிக்கும் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.