கனடாவைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 6000 மருத்துவப் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலின் போது முன்னணியில் நின்று வைரஸ் இடம் போராடியவர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல. பல்வேறு ஊழியர்களும் தான். அவர்களில் பர்சனல் சப்போர்ட் ஒர்க்கேர்ஸ் நிர்வாக மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களோ, செவிலியர்களோ அல்ல.
உடல்நலம் சரியில்லாதவர்கள், முதியோர்கள் ஆகியோரை கழிவறைக்கு அழைத்து செல்வது முதல் உணவு அளிப்பது வரை அனைத்துப் பணிகளையும் செய்பவர்கள்.இவர்களுக்கு சரியான ஒழுங்குமுறை அமைப்புகள் கூட இல்லை. இருப்பினும், கொரோனா பரவலின் போதும் நோயாளிகளை முழு நேரமும் கவனித்து வருகிறார்கள்.
அவர்களைத் தேடிச் சென்று கனேடியர் ஒருவர் உணவளித்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடியரான மொஹமத் ஃபகி என்பவர் கோழிக் கறியும் சோறும் சமைத்து முதியோர்களை பார்த்துக் கொள்ளும் மருத்துவ உதவியாளர்களுக்கு வழங்கி வருகிறார். பாரமவுண்ட் மிடில் ஈஸ்டென் கிச்சன் என்ற ஹோட்டலை நடத்தி வரும் இவர் தற்போது ஒரு நாளைக்கு மட்டும் 6000 மருத்துவ ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறார்.
இந்த எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை வாங்கிக் கொள்ளும் மருத்துவ ஊழியர்கள் மொஹமத்திடம் கூறியதாவது, நீங்கள் எங்கள் இதயத்தை நெகிழ செய்து விட்டீர்கள். உங்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். நாங்கள் சோர்ந்து போகும் நேரத்தில் எங்களை உற்சாகப் படுத்துகிறீர்கள் என்று கூறினர்.
அதற்கு பதிலளித்த மொஹமத், அப்படி இல்லை. நீங்கள் தான் எங்களுக்கு உதவுகிறீர்கள். எங்கள் நன்றியை காட்டுவதற்காகத் தான் உங்களுக்கு உணவளிக்கிறேன் என்று கூறினார். அதற்கு மேல் பேச நேரமில்லாமல் அவர் அடுத்த முதியோர் இல்லத்திற்கு உணவளிக்க செல்கிறார். இவரின் இந்த நற்செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது.