ஜப்பானியில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள 6 லட்சம் மக்களை காலி செய்து மாற்று இடத்துக்கு செல்லுங்கள் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பான் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்து இருக்கும் தீவு மாகாணத்தின் குயூஷுவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. சகா, நாகசாகி உள்பட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளநீர் தேங்கி கிடைப்பதால் முற்றிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சாலை, ரயில் போக்குவரத்து சேவைகள் முழுவதுமாக முடங்கியுள்ளது.மேலும் மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தோடு சேர்ந்து நிலச்சரிவுகளும் மக்களின் வாழ்வை புரட்டி போட்டுள்ளது.
அங்கு சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதோடு சிலர் காயமடைந்து , மீட்புக் குழுவினர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு இந்த கனமழை நீடிக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டுமென்று ஜப்பான் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.