Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!! பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை…!!

பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி வங்கிகள் ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் மூடப்படும் என்பது குறித்த அறிவிப்பு அந்த மாதத்தின் தொடக்கத்திலேயே ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டு விடும். இதன் பயனாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் செய்யும் வரவு செலவு மற்றும் பண பரிவர்த்தனைகளை தங்களுக்கு சவுகரியமான தினங்களில் நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும். அதே போல் வரும் பிப்ரவரி மாதமும் எத்தனை நாட்கள் வங்கிகள் அடைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இந்த பிப்ரவரியில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்படும் இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி பிப்ரவரி 2ஆம் தேதி சோனம் லோசர் என்பதால் காங்டாக்கில் வங்கிகள் மூடப் படும். பிப்ரவரி 5ஆம் தேதி சரஸ்வதி பூஜை, ஸ்ரீ பஞ்சமி என்பதால் கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும். பிப்ரவரி 15ஆம் தேதி முகமது ஹஸ்ரத் அலி பிறந்த நாள் என்பதால் இம்பால், கான்பூர் ,லக்னோவில் வங்கிகள் அனைத்தும் மூடப்படும். பிப்ரவரி 18ஆம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி என்பதால் சண்டிகரில் வங்கிகள் மூடப் படும். பிப்ரவரி 19-ஆம் தேதி சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் என்பதால் மும்பையில் வங்கிகள் அனைத்தும் மூடப்படும். இதுதவிர வார இறுதி நாட்கள் மற்றும் இரண்டாவது சனிக்கிழமையிலும் வங்கிகள் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Categories

Tech |