Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 601 நபருக்கு கொரோனா தொற்று; 58 பேர் கவலைக்கிடம் – அதிர்ச்சி தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்புடையவர்கள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லீக் ஜமாத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஏராளமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்புடையவர்கள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் கேரளா, மத்திய பிரதேசம், டெல்லியில் மொத்தம் 58 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இதில் 0 – 20 வயதினர்- 9%, 21-40 வயதினர் 42%, 41-60 வயதினர் -33%, 61 வயதுக்கு மேல் 17% உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 17 மாநிலங்களில் உள்ளனர் என்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |