Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடம் கேளுங்கள்.. நான் என்ன அவருக்கு.. கடுப்பான TTV தினகரன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரச்சாரம் செய்வார்களா ? என்று நீங்கள் அவர்களை சந்திக்கும் போது, இந்த கேள்வியை கேளுங்கள். நான் அவர்கள் சார்பாக பேச மாட்டேன். தஞ்சாவூர் மாணவி விவகாரம் பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லித்தான் இந்த மாதிரி விவகாரம் எனக்கு தெரியும்.

மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி தவறு என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து சென்றவர். அவர் என் நண்பர் தான். அவர் சொன்ன கருத்தில் தவறு இல்லை. அவர் சொன்ன வார்த்தை தேவையில்லாத வார்த்தைகள். அவர் எப்படி பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் வார்த்தைளில்தவறு இருக்கே தவிர கருத்து சரியானதுதான்.

கருத்து வேறு, வார்த்தை வேறு. அப்படி சொல்ல கூடாது அரசியலில்…. அவர்கள் தைரியமாக பண்ணவில்லை என்று சொல்லியிருக வேண்டும். அவர்களுக்கு தைரியம் இல்லை அவங்க சொல்லி இருக்கணும். அவுங்க எப்படி தைரியமாக இருப்பாங்க…  பவர் இருந்தபோது தைரியமா  இருப்பாங்க. அவங்க மடியில் கனம் இருக்கின்றது உலகத்துக்கே தெரியும்.

சின்ன குழந்தைக்கு கூட தெரியும். அதனால் அவர்கள் தைரியமாக இருக்க மாட்டாங்க என தெரியும். தைரியமாக பேச வில்லை என்ற வார்த்தையை மாற்றி சொல்லியிருக்கிறார். நான் அவர் சொன்ன வார்த்தைகளை போல என்னைக்கு பயன்படுத்தமாட்டேன் என தெரிவித்தார்.

Categories

Tech |