ஈரான் அரசுக்கு எதிரான முஹாஹிதீன்-எல்-கால் அமைப்புக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மைக்கல் பாம்பேயோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் அந்த அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் அவரும் ஏராளமான குடியரசு கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து பாம்பேயோ உள்ளிட்ட 61 பேர் மீது ஈரான் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அவர்களின் யாருக்கும் ஈரானில் சொத்துக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற சூழலில், எதிர்ப்பை தெரிவிக்க கூடிய வகையில் இந்த பொருளாதாரத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.