Categories
மாநில செய்திகள்

“61 நாட்களுக்கு பின் மீன்பிடி தடைக்காலம் நிறைவு”….. மீன் பிரியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்….!!!!

மீன் வேட்டையை மீனவர்கள் மீண்டும் துவங்கியுள்ளதால் மீன் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடை காலம் போடப்பட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் இன்று ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுதுபார்த்தல், வண்ணம் தீட்டுதல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில்நேற்று நள்ளிரவு 12 மணியுடன் தடைக்காலம் முடிவடைந்தது. கடந்த 2 நாட்களாக, மீன் பிடிக்க தேவையான வலை போன்ற உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணி தீவிரமாக ஈடுபட்ட மீனவர்கள் இன்று அதிகாலையில் உற்சாகமாக மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். மீன்பிடி தடைக்காலத்தில் மீன்வரத்து குறைந்ததால் மீன்களின் விலை பலமடங்கு உயர்ந்தது. தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதால் மீன்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,  தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், படகுகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வதோடு மீனவர்களை கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு மத்திய மாநில அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் கடல் கொள்ளையர்களால் அத்துமீறி நடத்தப்படும் தாக்குதல் மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |