Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்…. 61 நாட்கள் தடை…. அதிகாரி வெளியிட்ட அதிரடி தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கபட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலுள்ள  விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி அதிகாரி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளில் உள்ள பழுதுகளை சரி செய்யவும், படகுகளுக்கு வர்ணம் தீட்டவும் மற்றும் மீன்பிடி உபகரணங்களை புதுப்பித்து கொள்ள இந்த நாட்களை பயன்படுத்தி கொள்வார்கள். மேலும் நாட்டுப்படகு மீனவர் மட்டுமே கடலுக்கு செல்வதால் மீன்கள் குறைந்த அளவே கிடைக்கும் என்பதால் அப்பகுதியில் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகமாக காணப்படும் என்று மீன் வளத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |