தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,342 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.69% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. இன்று வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இருந்து வந்த 35 பேர், குஜராத்தில் இருந்த வந்த 6 பேருக்கும், தலங்கானாவில் இருந்து வந்த 3 பேருக்கும், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.