நடிகர் அஜித்குமார் திரையுலகில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு பிரபலமான இடங்களை சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சென்ற சில தினங்களாக அவர் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். இதையடுத்து அஜித் விசாகப்பட்டினத்தில் துணிவு படப் பிடிப்பில் கலந்துகொண்டு முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.
கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளத்தில் வெளியாகியது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் அஜித் நடிக்க தயாராகியுள்ளார். இப்படத்தில் நடித்து முடித்த பின் மோட்டார் சைக்கிளில் உலகை சுற்ற அஜித்குமார் திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒன்றரை வருடம் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடித்த பிறகே அடுத்த திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர இருக்கிறது.