பெரும்பாலான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வேறு வேலைக்கு செல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் நம் நாட்டில் வேலை கிடைக்காத பட்சத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். மேலும் பலரும் எப்படியாவது அரசு வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில்கூட இளைஞர் ஒருவர் 24 வருடங்களாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்கவில்லை என்று பேனர் வைத்தது இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு வேலைக்காக 63.63 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலும் 24 வயது முதல் 35 வயது உடையவர்கள் 22.8 லட்சம் என்றும், 36 முதல் 57 வயதுடையவர்கள் 10.59 லட்சம் பேரும், இன்ஜினியரிங் முடித்தவர்கள் 2.8 லட்சம் பேரும், எம்.இ, எம்.டெக் பட்டதாரிகள் 2.18 லட்சம் பேரும் காத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.