குஜராத் மாநிலத்தில் 63 வயதுடைய நபருக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தின் பீப்பல் சட் கிராமத்தை சேர்ந்தவர் 63 வயதாகும் கல்யாண்குமார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே அவர் காலம் கழிந்தது. 63 வயதான நிலையிலும் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார்.
அதன்படி அவரை திருமணம் செய்து கொள்ள லைலாபென் ரபரி என்ற 40 வயது பெண் சம்மதம் தெரிவித்தார். அதன் பின் அவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து வீட்டிற்கு சென்றபோது லைலா திடீரென தரையில் மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் லைலாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே லைலா உயிரிழந்தார். இதனை அறிந்த 63 வயது கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். 63 வயதில் கல்யாணுக்கு நடந்த திருமணத்தை எண்ணி மொத்த கிராமமும் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் புதுப்பெண் உயிரிழந்ததால் மொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியது.