Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

64 கடைகளில் திடீர் சோதனை…. 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருவதால் கடற்கரை பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலக செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் கொட்டாரம் பகுதியில் இருக்கும் 64 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 12 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒரு கடைக்கு 2000 ரூபாய் வீதம் 24 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலித்தனர்.

Categories

Tech |