ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் பகுதியில் விவசாயியான கே.பி கிருஷ்ணமூர்த்தி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாவித்திரி(60). இந்த தம்பதியினருக்கு கன்னியப்பன் என்ற மகனும், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தியும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம் வயது முதிர்வு காரணமாக கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். அவரது தோட்டத்திலேயே உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த சாவித்திரி நேற்று மதியம் உயிரிழந்தார். கணவரின் உடல் எரியூட்டப்பட்ட இடத்திற்கு அருகிலேயே சாவித்திரியின் உடலும் எரியூட்டப்பட்டது. 65 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.