Categories
மாநில செய்திகள்

65 கிமீ வேகத்தில் சூறைக்காற்று : புதிய எச்சரிக்கை….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தென் கிழக்கு வங்க கடலில் நேற்று உருவான வளிமண்டல சுழற்சி வலுவடைந்து நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யும் எனவும் அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூரை காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |