Categories
மாநில செய்திகள்

65 வயதுக்கு மேற்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்…. அரசு குட் நியூஸ்…!!!!

ஹஜ் பயணத்திற்கு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-க்கான ஹஜ் தற்காலிக வழிகாட்டுதல்களில் பகுதி மாற்றம் செய்து தற்போது மும்பை இந்திய ஹஜ் குழுவானது பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் வயதான பயணிகள் பயன்பெறும் வகையில் அதிகபட்ச வயது வரம்பில் ரத்து செய்துள்ளது.

அதன்படி 65 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும் 70 வயது பூர்த்தி அடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய விண்ணப்பதாரர்களுடன் ஒரு துணை பயணி விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |