Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“65 வருடங்கள்” பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி…. புதர் செடிகள் அகற்றும் பணி தீவிரம்…!!!

பள்ளி வளாகத்தை சுற்றி இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் 65 வருடங்கள் பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் வளாகத்தை சுற்றிலும் அடர்த்தியான புதர் செடிகள் உள்ளது.

இதன் காரணமாக வனவிலங்குகள் பள்ளி வளாகத்தை சுற்றி அதிக அளவில் நடமாடுகிறது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |