Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

650 சுயஉதவி குழுக்கள் … விதை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி …மகிழ்ச்சியில் பெண்கள்…!!

ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக பெண்களுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி அரசு தோட்டக்கலை பண்ணையில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக முருங்கை, பப்பாளி, பீர்க்கன், கத்தரிக்காய், புடலை, கீரை, உள்ளிட்ட விதை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தோட்டக்கலை அலுவலர் இந்துமித்ரா, வட்டார வாழ்வாதார இயக்கமேலாளர் சோனைமுத்து, வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகந்தி, முருகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் 15 ஊராட்சிகளில் இருந்து 650 சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

Categories

Tech |