Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ65,00,00,000 ஒதுக்கீடு….. தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது….. அன்புமணி ராமதாஸ் பேச்சு….!!

காவேரி-கோதாவரி திட்டத்தை செயல்படுத்தினால் வேலூரில் தண்ணீர் பஞ்சத்துக்கே இடம் கிடையாது  என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகரப் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் முப்படை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜிகே மணி தலைமை தாங்க, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்  நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறினார். அதில்,

காவேரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால், வேலூர் மாவட்டத்தில் வரட்சி என்ற பெயருக்கே இடம் கிடையாது என்ற அளவிற்கு தண்ணீர் செழிப்பாக இருக்கும். இது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசை நான் வலியுறுத்தி வந்தேன்.

அதன்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி இத்திட்டத்திற்கு  65 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஐந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது அவசியமற்றது. இதற்கு எதிராக வருகிற 28-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்த அவர், இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

Categories

Tech |