Categories
Uncategorized மாநில செய்திகள்

6,503 காலி பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலி பணியிடங்களை பொங்கலுக்குள் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 14 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பணியிடங்களை 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே ரேஷன் கடையில் சேர விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |