Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

65,856 மாணவ மாணவிகள்…. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!

15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா 3-ஆம் அலை அச்சுறுத்தி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் தற்போது 15 வயது முதல் 18 வயது உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு அறிவுறுத்தலின்படி பள்ளிகளிலேயே படிக்கும் 11 & 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 11 & 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மொத்தம் 65,856 மாணவர்கள் உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எர்ணாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 15 வயது முதல் 18 வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியர் ஸ்ரேயா சிங், எம்.எல்.ஏ ராமலிங்கம், எம்.பி., ராஜேஷ் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், பணியாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்த அவர்களது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றி தகுதியான நபர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |