தமிழகத்தில் நேற்று மட்டும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்தது. 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,27,575 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,759 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் மட்டும் 984 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,07,109 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,606 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.84 % குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 119 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,690 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 65,189 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 29,75,657 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 24 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டாலும் சென்னை நிலவரத்தால் 66நாட்களுக்கு பிறகு அரசு நிம்மதி அடைந்துள்ளது. ஆம் கடைசியாக ஜூன் 3ஆம் தேதி 1012ஆக பாதிப்பு உயர தொடங்கிய நிலையில் நேற்று தான் ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.