மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ரன் குவித்து வருகின்றது.
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகின்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ஹீலி – மோனி களமிறங்கினார். தீப்டி சர்மா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி அதிரடி காட்டியா ஹீலி, 5ஆவது மற்றும் 6ஆவது பந்தையும் பவுண்டரிக்கு விளாசி பவுலர்களை நடுங்கச் செய்தார்.
பின்னர் 2ஆவது ஓவரை வீசிய பாண்டே ஓவரின் 2ஆவது மற்றும் 5ஆவது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அடுத்தடுத்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியால் 37 பந்துகளில் 50 ரன் எடுத்து ஆஸ்திரேலியா அணி அசத்தியது. ராஜேஸ்வரி வீசிய 8ஆவது ஓவரின் 3 மற்றும் 4ஆவது பந்தை அடுத்தடுத்து சிக்ஸருக்கு வீளாசிய ஹீலி 30 பந்துகளில் பவுண்டரி அடித்து அரைசதம் பதிவு செய்தார்.
மறுமுனையில் நின்று ஆடிய மோனியும் தனது பங்குக்கு இந்திய ஆணியினரின் பந்து வீச்சை விளாச அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பாண்டே வீசிய 11ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த மோனி 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க அடுத்து வந்த ஹீலி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். பின்னர் 12ஆவது ஓவரை வீசிய யாதவ் ஓவரின் 4ஆவது பந்தில் ஹீலி ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 7 பவுண்டரி , 5 சிசிக்சருடன் 75 ரன் அடித்து ரன் மழை பொழிந்துள்ளார்.