நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றது.
கொரோனா 2ஆம் அலையை சமாளிப்பதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கிறது. தற்போது 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் நேற்று முதல் 18 வயது மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பலரும் மிகவும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நாமக்கல் தடுப்பூசி முகாமில் நேற்று ஒரே நாளில் 6,683 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு கூடுதலாக 24,800 டோஸ் தடுப்பு ஊசிகளை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே 18 வயது மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.