இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை கடந்த டிசம்பர் 18ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டு முதல் 48 மணி நேரத்திற்கு உயிர்காக்கும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். இது தமிழகத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் எந்த வேறுபாடு இல்லாமலும் இந்த சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக தமிழகத்தில் 610 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 12 மாதத்திற்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது கோவை மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம் 16 அரசு மருத்துவமனைகள் உள்பட 67 மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க இந்த திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 610 மருத்துவமனைகள் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.