இலங்கையிலிருந்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு செல்ல முயற்சித்த 67 அகதிகள் கைதாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் விலைவாசியும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசாங்கத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் உணவு பஞ்சம் ஏற்பட்டு அந்நாட்டை சேர்ந்த பல தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு ராமேஸ்வரத்திற்கு பல மக்கள் சென்று முகாம்களில் தங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில், இலங்கையிலிருந்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு அகதிகள் 67 பேர் தப்பி செல்ல முயற்சித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.