Categories
உலக செய்திகள்

“என்னக் கொடூரம்!”…. 100 பிணங்களுடன் உறவு வைத்த கொடூரன்…. பிரிட்டனில் அதிர்ச்சி சம்பவம்….!!

பிரிட்டனில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவமனை எலக்ட்ரீசியன் பிணவறையில் 100க்கும் அதிகமான பெண் உடல்களுடன் உடலுறவு வைத்ததாகக் கடும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 1987-ம் வருடத்தில் இங்கிலாந்தில் இருக்கும் கென்ட் கவுன்டியின் Tunbridge Wells நகரில், வசித்த வென்டி நெல் மற்றும் கரோலின் பியர்ஸ் ஆகிய இளம் பெண்கள் இருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு அவர்களின் இருப்பிடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில், அவர்களின் உடல்கள் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.

இருவரும் உயிரிழந்த பின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது. நாடு முழுவதும், இக்கொலை மிகப் பிரபலமாக அறியப்பட்டது. சுமார் 34 வருடங்களுக்கு பின், கடந்த டிசம்பர் மாதத்தில் தான், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 67 வயதான டேவிட் புல்லர் என்ற நபர் கைதாகினார்.

விசாரணை மேற்கொண்ட பின் அவர் செய்த குற்றங்கள் நிரூபணமானது. மேலும், அவர், தான் செய்த குற்றத்தை ஒத்துக் கொண்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, டேவிட் புல்லர் பணியாற்றிய 3 மருத்துவமனைகளில் இருக்கும் பிணவறைகளில் சுமார் 30 வருடமாக, குழந்தை முதல் மூதாட்டி வரை சுமார் 101 பிணங்களுடன் உடல் உறவு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |