Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,718 மாணவர்களின் படிப்பை பிடுங்கிய வறுமை…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6718 பேர் வறுமை, குடும்ப சூழல் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக உயர்கல்வியில் சேரவில்லை என பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 8249 பேர் இந்த வருடம் உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தன.

மேலும் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, பணியில் சேர்ந்தது, பெற்றோர் படிக்க அனுமதிக்காதது, தேர்வு எழுதாமல், தொழில் செய்வது,அருகாமையில் கல்லூரி இல்லாதது ஆகிய காரணங்களால் உயர்கல்வியில் சேராமல் 6718 மாணவர்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |