மேஷம்
மேஷ ராசி அன்பர்களே…!!!! இன்று அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களை வெற்றிகரமாகவும் செய்வீர்கள், ஆனால் தாமதமான பலனே கொஞ்சம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகத்தான் வந்து சேரும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் போது நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு ஓரளவு இருக்கும். புதிய வாடிக்கையாளரிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது ரொம்ப நல்லது. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்லுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷியங்களிலும் நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேற் கல்வியில் முயற்சி செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் தடைகள் விலகி செல்லும் சக மாணவிகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே..!!!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும. நாள்பட்ட நோய் அகலும் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வர கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்றுக் கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. இன்று உடல் ஓய்வின்றி உழைப்பீர்கள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது.
குடும்பத்தில் இருப்பவருடன் நிதானமாக பேசுவதும், குடும்பத்தில் அமைதி இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் விலகிச் செல்வது போல் இருக்கும், விட்டுப் பிடிப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும் போட்டிகளை தவிர்க்க துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் நீங்கள் எடுக்கக் கூடும். இன்று மாணவ செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். சக மாணவர்களின் முழு ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். ஆசிரியர்களின் அன்புக்கும் இருப்பிர்கள். இன்றைய நாள் மாணவர்களுக்கு ரொம்ப சிறப்பாக அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் அது மட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே….!!!! இன்று காரிய வெற்றி காண கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். மனதில் இனம்புரியாத கவலை தோன்றும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். இன்று புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவதும், கவனமாக காரியங்கள் செய்வது ரொம்ப நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் இருக்கும். வீண் அலைச்சல் குறையும், சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும். உங்களுடைய குறிக்கோள் அனைத்தும் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களால் வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம்.
கணவன் மனைவிக்கு இடையே திடீரென்று கருத்து வேற்றுமை ஏற்படும், கவலை வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்யுங்கள். பொருட்களை கையாளும்பொழுது ரொம்ப கவனமாகவே ஈடுபடுங்கள். இன்று மாணவர்களுக்கு எப்போதும் போலவே கல்வியில் தடை ஏதும் இல்லை, கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை பெறக்கூடும்.
இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் பச்சை நிறம் எப்பொழுதுமே மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு சிறந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவன் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அணைத்து காரியமும் நல்ல படியாகவே நடக்கும்
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை
கடகம்
கடக ராசி அன்பர்களே…!!!! இன்று அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும், நாளாக இருக்கும். கொடுக்கல், வாங்கல்களில் இருந்த இருந்த குழப்பங்கள் மறையும். வியாபார வளர்ச்சி கருதி புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். இடம் பூமியால் லாபம் உண்டாகும். இன்று சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். கவனமாக செயல்படுவது எப்பொழுதும் நல்லது.
வாடிக்கையாளர்களுக்கு தேவைகளை சமாளித்து விடுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பதில் தாமதம் இருக்கும். மன வலிமை இன்று அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும் . இன்று பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும்.
இன்று மாணவச்செல்வங்களுக்கு கல்வியில் கொஞ்சம் தடை இருக்கும். கூடுமானவரை பாடங்களை மட்டும் சிறப்பாக கவனம் செலுத்திப் படியுங்கள். விளையாட்டை தயவு செய்து இரண்டு நாட்களுக்கு ஓரங்கட்டிவிடுவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் உங்களுக்கு ரொம்ப அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்ல படியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்டா எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்டா நிறம்: நீலம் மற்றும் இளஞ்சிவப்பு
சிம்மம்
சிம்மம் ராசி அன்பர்களே …!!!! இன்று வெற்றி வாய்ப்புக்கள் தேடிவரும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்ளவார்கள். பழைய வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். இன்று குறிகோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.
கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வேலை நிமிர்த்தமாக குடும்பத்தை விட்டு வெளியேறலாம். வீண் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். இன்று மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்களா இருப்பார்கள், இருந்தாலும் கவனமாக விளையாடுங்கள் அது போதும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டு பேசுவது ரொம்ப நன்மையை கொடுக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சேர்த்து வழிபடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள அணைத்து பிரச்சனைகளும் சரியாகி, காரியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு
கன்னி
கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் தீட்டிய திட்டங்கள் லாபம் அதிகரிக்கும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இன்று குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மாற்றுக் கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது ரொம்ப நல்லது.
இன்று மாணவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்து காரியங்களில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் கொஞ்சம் இருக்கும்.கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் பேசும்போது நீங்கள் ரொம்ப கவனமாக பேசுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் பச்சை
துலாம்
துலாம் ராசிஅன்பர்களே…
இன்று வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வார்கள்.பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள் மறைமுகப் போட்டிகள் விலகி செல்லும்.
இன்று தொழில் சீராக நடைபெறும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப சிறப்பு.
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்துச் செய்வது நன்மையை கொடுக்கும். இன்ற மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். இன்று அடுத்தவர்கள் யோசனையை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது ரொம்ப நல்லது.
இன்று கூடுமானவரை பொறுமையே மட்டும் கையாளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்கும் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் .இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்தையுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
விருச்சிகம்
விருச்சிகம் ராசி நேயர்கள்…
இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். நேற்றுய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள் அன்றாடப் பணிகல் நன்றாக அமையும் அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும்.
இன்று பணத்தட்டுப்பாடு நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும் அவசர முடிவுகள் எடுப்பதை தயவுசெய்து தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் ஏற்படும் வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
இன்று உடல்நிலையை அவ்வப்போது கவனித்து கொள்ளுங்கள். முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி இன்று நல்லபடியாகவே நடந்து முடியும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தப் பிரச்சினையும் இல்லை சரியான முன்னேற்றம் இருக்கும் ஆசைகளின் முழுமையான ஆதரவு இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவாபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட மான எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
தனுசு
தனுசு ராசி நண்பர்களே..
இன்று காலை நேரத்திலேயே உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும். தைரியத்தோடும்,தன்னம்பிக்கையோடும் செல்படுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற நல்ல பலனும் உண்டாகும்.
இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது மட்டும் நன்மையை கொடுக்கும் .பெண்களுக்கு மனத்தெளிவு ஏற்படும் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும். கூடுமானவரை நீங்கள் கல்வியில் மட்டும் ஆர்வத்தை கொண்டு போவது ரொம்ப சிரப்பு. விளையாட்டை இன்று ஏற கட்டிவிடுவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
மகரம்
மகரம் ராசி நேயர்களே …
இன்று சுப காரியம் ஏற்படும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. குடும்பத்தினர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் பலன் கொடுக்கும்.
இன்று குடும்பத்தில் கலகலப்பு ஏற்படும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அக்கம் பக்கத்திலும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
இன்று முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும் .உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள் .இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைவரின் ஒத்துழைப்பும் இருக்கும். மேற்கல்விகான முயற்சியில் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும்.இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
.மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்
கும்பம்
கும்பம் ராசி நேயர்களே…
இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். அயல்நாட்டுப் பயணத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன்கருதி திட்டம் ஒன்றை தீட்டுவீர்கள் . அரசியல் செல்வாக்கும் மேலோங்கும். தொழில் போட்டிகள் அகலும் .கணவன்-மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிலவும்.
இன்று மனதில் தைரியம் பிறக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது மட்டும் நல்லது. வீண் வாக்குவாதங்களை விட்டு நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாகத்தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும் .
இன்று குடும்ப உறுப்பினரிடம் இருந்த சகஜ நிலையில் மாற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும் .
இன்று உங்களுக்கான..
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 9
அதிஷ்ட்டமான நிறம் : வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்
மீனம்
மீனா ராசி அன்பர்களே …
இன்று சொல்லை செயலாக்கிக் காட்டும் நாளாக இருக்கும் மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும் தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு செயல்படுவது ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாமல் இன்று காரியங்களை நீங்கள் முன்னேற்பாடு உடன் செய்வது ரொம்ப நல்லது . எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
இன்று புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து தள்ளிப்போடுங்கள் . எல்லா நன்மைகளும் உங்களை என்று தேடி வரும் . தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் மட்டும் சின்னதாக தடை இருக்கும். பார்த்துக்கொள்ளலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை.
திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது இன்று குறையும். உடல் ஓய்வாக தான் இன்று காணப்படும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை.
இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்னதாக பூசல்கள் வந்து செல்லும் . கூடுமான வரையில் எந்த பிரச்சனையும் பேசித் தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் நீங்கள் கடன் கொடுக்காதீர்கள் கடன் வாங்காதீர்கள். இந்த விஷயத்தில் இரண்டு நாளைக்கு நீங்கள் கொஞ்சம் கடைபிடிப்பது ரொம்ப சிறப்பாக இருக்கும் .
இன்று மாணவக் கண்மணிகள் கல்வியில் வெற்றி பெறுவார்கள் . கடுமையான முயற்சியால் விளையாட்டு துறையில் வெற்றி பெறுவீர்கள் .ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். எப்போதும் போலவே படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியில் நீங்கள் ஈடுபடும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் . வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கு
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்