Categories
அரசியல்

தமிழகம் வந்த 68 பேருக்கு கொரோனா…. 12 மாவட்டத்திற்கு வந்த புது தலைவலி …!!

வட மாநிலங்களில் இருந்து வந்த தமிழகம் வந்த 68 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் குறைவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 87  பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றைக்கு ஒரே நாளில் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த 56 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவர் ,  ஒரிசாவில் இருந்து வந்த ஒருவர், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்த இரண்டு பேர், தெலுங்கானாவில் இருந்து வந்த ஒருவர், உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்த ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்த 6 பேர் என இன்றைக்கு ஒரே நாளில் 68 நபர் களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 29 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, வேலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 68 பேருக்கு இன்று ஒரே நாளில் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |