Categories
மாநில செய்திகள்

681 வந்துட்டாங்க நன்றி…. 40 பேர் வரல…. வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்….!!

ஈரானில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை மீட்டு வர கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

நம்மில் பலர் சொந்த ஊரிலேயே தொழில் அல்லது வேலையை செய்து தங்களது வாழ்க்கையை ஓட்டி வருவதில்லை. பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் குடும்பத்தை விட்டு சென்று வேலை செய்து தங்களது குடும்பத்தை பராமரித்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால், சொந்த ஊரிலிருந்து பிற பகுதிகளுக்கு வேலைக்காகச் சென்றவர்கள் வேலை இழந்து அங்கேயே சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு துரிதமாக நாள்தோறும் செயல்பட்டு வருகிறது.

அதன்படி ஈரானில் சிக்கியிருந்த தமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டு வருமாறு ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி, கப்பலில் 681 தமிழக மீனவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். ஆனால் 40 மீனவர்களுக்கு கப்பலில் இடம் இல்லாததால், அவர்களை அங்கேயே விட்டு வந்தனர். தற்போது அந்த 40 மீனவர்களையும் மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது கடிதம் எழுதியுள்ளார். அதில், 681 தமிழக மீனவர்களை மீட்டு கொண்டு வந்தமைக்கு நன்றி. அதேபோல் எஞ்சியுள்ள 40 தமிழர்களையும் மீட்டு கொண்டுவர மத்திய அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |