Categories
அரசியல்

உள்ளாட்சித்துறை செயலாளர்…. அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதன் பின்னணி?…. தமிழக முதல்வரின் விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித்துறை பொதுச்செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதன் பின்னணி குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொழுவாரி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய துறை உள்ளாட்சித்துறை ஆகும். இந்தத் துறையில் ஏற்கனவே நான் அமைச்சராக பணியாற்றி இருக்கிறேன். இந்தத் துறையில் இருக்கும் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இந்தத் துறை மேன்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

எனவே தான் இந்தத் துறைக்கு அமைச்சராக பெரிய கருப்பனை நியமிக்கலாம் என நினைத்தேன். அவரிடம் உள்ளாட்சித்துறையை கொடுத்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கூறி அமைச்சர் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன். இந்தத் துறையின் செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் பணியாற்றி வருகிறார். இவர் டெல்லியில் இருக்கும் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். நான் டெல்லிக்கு சென்ற போது அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களை சந்தித்து பேசினேன். அவரிடம் நீங்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆகவும், பல்வேறு துறைகளில் பொறுப்பான பதவிகளிலும் சிறப்பாக  பணியாற்றி இருக்கிறீர்கள்.

உங்களுடைய பணியினை கண்டு நான் பலநாள் வியப்படைந்திருக்கிறேன். நீங்கள் உடனடியாக தமிழகத்திற்கு வரலாமே என கூறியுள்ளார். நீங்கள் சொன்னால் அடுத்த நொடியே வந்து விடுகிறேன் என அமுதா ஐ.ஏ.எஸ் கூறியிருக்கிறார். அதன்பிறகு நான் டெல்லியில் இருக்கும் அரசு அதிகாரிகளுடன் பேசி அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களை தமிழக உள்ளாட்சித் துறையின் செயலாளராக பணியில் அமர்த்தினேன். இந்த பணியில் அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அமுதா ஐ.ஏ.எஸ்  சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் 2 பேருக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

Categories

Tech |