Categories
தேனி மாவட்ட செய்திகள்

69 அடியை எட்டிய வைகை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை… பொதுமக்கள் ஆற்றில் குளிக்க தடை…!!

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளதால் கடையோர மக்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரமே வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீரை வெளியேற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் நீர்வரத்து குறித்து கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த இரு தினங்களாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 71 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம்  தற்போது 69 அடியாக  உயர்ந்துள்ளது. எனவே வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 3,200 கன அடி நீரும், பாசன வாய்க்கால்கள் வழியாக 1,650 கனஅடி நீரும், 58-ம் கால்வாயில் இருந்து 150 கன அடி நீரும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 69 கன அடி நீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சுமார் 5,000 கன அடிக்கு மேலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரை பாலத்தை மூழ்கடித்தபடி ஆர்பரித்து ஓடியுள்ளது.

மேலும் வைகை அணை, மஞ்சளாறு, மருதாநதி ஆகிய ஆறுகில் இருந்தும் அனைப்பட்டியில் உள்ள வைகை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சுமார் 20 ஆண்டுக்கு பிறகு வைகை ஆற்றில் 10கனஅடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்று படுகையை ஒட்டியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து கூட்டத்து அய்யம்பாளையம், குல்லிசெட்டிபட்டி, அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம், லட்சுமிபுரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு ஆற்றில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுபணித்துறை மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் ஆற்றில் இறங்கும் பகுதிகளை முல்செடிகளை வைத்து அடைத்துள்ளனர்.

Categories

Tech |