உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 69 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-பெருமாள் பேட்டை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ராமநாயக்கன் பேட்டை பகுதியில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 69 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதை பேரூராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.