Categories
தேசிய செய்திகள்

6ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த… அரசு பள்ளி ஆசிரியர்… காவலுக்காக மற்றொரு ஆசிரியர்… கொடூர சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததால், கர்ப்பமானால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு ஆசிரியரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 முதல் 4 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு மற்றொரு ஆசிரியர் காவல் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

சிறுமி உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. சோதனையின்போது சிறுமி கர்ப்பம் ஆனதை அறிந்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். பின்னர் இரண்டு ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்ததோடு, அவரை சிறையில் அடைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சிறுமிக்கு ஆதரவும், உதவியும் வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |