கொரோனா பொதுமுடக்கத்தால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்த நிலையில் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு பொதுமுடக்க காலத்திலும் இணைய வழியில் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவன் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் தற்போது 6ம் வகுப்பு முதல் 12ம் மாணவர்களுக்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை Bonafide Certificate வழங்க அலைக்கழிக்கும் கூடாது என்று அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். எனவே மாணவர்கள் விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.