Categories
தேசிய செய்திகள்

உலகளவில் 6ம் இடம்…! ”ஏற்றம் காணும் இந்தியா” சிக்கி கொள்ளும் அபாயம் ….!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

கட்டுப்படுத்திய இந்தியா :

இதனிடையே உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியா கொரோனா வைரசை எப்படி கட்டுப்படுத்தும் என்ற ஒரு கேள்வி உலக நாடுகள் மத்தியில் இருந்த நிலையில் இந்தியா சாமர்த்தியமாக கொரோனாவை கையாண்டு வந்தது. முன்னதாகவே இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் கட்டுக்குள் இருப்பதாக சொல்லப்பட்டது.நாடு முழுவதும்  மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

40,000 நெருங்கும் பாதிப்பு :

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை நெருங்க இருக்கின்றது.

மொத்த பாதிப்பு :

இந்தியாவில் கொரோனா தொற்றால் 39,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,633 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சியான தகவலாக பார்க்கப்பட்டாலும் 1,301பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து கவலையடையவைத்துள்ளனர். மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் 27,547 பேர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்ற ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.

கட்டுப்படுத்திய ஐரோப்பிய நாடுகள்:

கடந்த சில நாட்களாக கொரோனாவின் மையங்களாக திகழ்ந்த இத்தாலி, ஸ்பெயின், UK, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்திக் கொண்டு வருகின்றன. அதே வேளையில் இந்தியாவில் கொரோனாவின் வீரிம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது உலகளவில் கொரோனா தொற்றில் இந்தியா மாட்டிக்கொள்ளுமா ? என்ற கேள்வியை எழுப்புகின்றது.

அதிக பாதிப்பு :

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை விட அதிகம் என்பது அதிர்ச்சியை கொடுக்கும் தகவலாக பார்க்கப்படுவதோடு உலகளவில் ஒரே நாளில் அதிக பாதிப்பில் 7ஆவது இடத்தில் இருந்த இந்தியா 6ஆவது இடத்துக்கு சென்றுள்ளது கொரோனா தொற்றில் இந்தியா சிக்கி விடும் என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் இந்தியா எப்படி ?

நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 29,744 பேரும், ரஷ்யாவில்  9,623 பேரும், பிரிட்டனில் 4,806 பேரும், பிரேசிலில் 4,450 பேரும்,  ஸ்பெயினில் 2,588 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல இத்தாலி (1,900), ஜெர்மனி (890), பிரான்ஸ் (1,050) ஆகிய நாடுகள் இந்தியாவை விட குறைவான பாதிப்பை பெற்றுள்ளது. இது நாட்டு மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

https://www.seithisolai.com/india-overtakes-italy-7th-worldwide-shocking-info.php

Categories

Tech |