மனைவியுடன் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்க்கையை நடத்த உணர்வுகளை சந்தோஷப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அனைவருமே தங்களது வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். சிலர் தங்களது குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வரும் சமயத்திலும் ஒரு சிலர் தங்களது குடும்பத்தினருடன் சண்டை சச்சரவால் அவதிப்படுகின்றனர்.
அந்த வகையில் கணவன்-மனைவி இடையே அதிக அளவில் சண்டைகள் வரும். இதில் மனைவியை மகிழ்வித்துவிட்டால், பெரும்பாலும் சண்டைகள் என்பதே வீட்டிற்குள் வராது. அவர்களை மகிழ்விப்பது எப்படி என்பது குறித்து செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். 1.மனைவி பேசுவதை முதலில் காதுகொடுத்து கேட்கவேண்டும்.
2.உங்கள் வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்களை நினைவு படுத்தி மகிழ்ச்சி படுத்தலாம்.
3.வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருந்தால் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேளுங்கள். இது அவர்களுக்கு தனது கணவர் தம் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்துகிறார் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும்.
4.உங்களிடம் ஆசையாக அவர் எதையேனும் கேட்டால் அதை மறுக்காமல் செய்துவிடுங்கள்.
5.மனைவி சொல்லாமலேயே சில வேளைகளை நீங்களாகவே செய்தால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
6.உடையில் மாற்றம் இருந்தால் அதை கூறினாலும் கணவர் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறார் என்ற எண்ணம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.