கேரளா மாநிலத்தில் கோழிகூடு அருகிலுள்ள குமரமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 வயது குழந்தை உடலில் தீக்காயங்களுடன் கடு சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இதுகுறித்து குமாரமங்கலம் காவல் நிலையம் மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஆகியோரிடம் புகார் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் மற்றும் குழந்தை நல அதிகாரிகள் உடனடியாக குழந்தையிடம் விசாரணை நடத்திபோது அந்த குழந்தையை தன் தாய் தன் உடலில் கரண்டியால் சூடு போட்டார் என்று தன் மழலை குரலில் கூறினார்.
அதன்பிறகு அதிகாரிகள் தாயிடம் விசாரணையின் செய்தபோது, குழந்தைகளுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் குழந்தை வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்பதால் கரண்டியை தீயில் பழுக்கக் காய்ச்சி குழந்தையின் உடல் முழுவதும் சூடு போட்டுள்ளார். இதனால் குழந்தை அழுகை சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் குழந்தையின் தாய்மாமன் அனைவரும் குழந்தையை மீட்டு சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அழைத்து வந்ததாக தெரியவந்தது.
மேலும் தன் கணவர் விட்டுச்சென்ற நாளிலிருந்து அடிக்கடி தன் குழந்தையை இப்படித்தான் கொடூரமாக அடித்து வருவதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். அதன்படி அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.