கடந்த 2014 ஆம் ஆண்டு 234 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டு பிடிக்கப் போவதாக நிபுணர் பீட்டர் போலெய் அறிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 234 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு சென்றுகொண்டிருந்த எம்எச் 370 விமானம் காணாமல் போனது. அந்த விமானம் புறப்பட்ட ஒன்றரை மணிநேரத்திற்குள் தென்சீனக்கடல் வான்வெளியில் திடீரென்று காணாமல் போனது. ஆனால் அவற்றின் பாகங்கள் மொரிசியஸ், மடகாஸ்கர், தன்சனியா மற்றும் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல் போன விமானத்தை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பீட்டர் போலெய், விமான நிபுணர்களால் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விமானத்தை தேடும் பணி தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஓசன் ட்ரிப்ட் மற்றும் விமான பாதை பகுப்பாய்வு தரவுகளின்படி மாயமான விமானம் ஆஸ்திரேலியாவின் கேப் லீயூவின்க்கு மேற்கே 1200 மைல் தொலைவில் விழுந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.