மக்களிடம் பொய் சொல்வதை மட்டுமே ஒரு பிழைப்பாக அமைச்சர் வைத்திருக்கின்றார் என அண்ணாமலை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சில கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். மத்திய அரசை காரணம் காட்டி அதன் காரணமாக நாங்கள் கோவிலை திறக்கவில்லை மத்திய அரசிடம் இருந்து அனுமதி வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். மத்திய அரசு அனுமதியை நான் படிக்கின்றேன். என்ன ஆர்டரை வைத்து அவர் பேசிக்கொண்டிருக்கிறாரோ அதை ஆர்டரில் மத்திய அரசு அனுமதி கூட இருக்கு.
28 செப்டம்பர் 2021 உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆர்டரில் உள்ள 5ஆவது பாயின்ட் மட்டும் அமைச்சர் படிக்கிறார். மக்களை அதிகமாக கூட அனுமதிக்காதீர்கள் என்று போட்டிருக்கிறார்கள். அதுல 7ஆவது பாயின்ட் படித்தீர்கள் என்றால்…. அதில் மிக தெளிவாக மத்திய அரசு கூறியிருக்கிறது. பண்டிகைகள் ரொம்ப நடக்குது டிசம்பர் 31 வரைக்கும், எல்லா இடத்திலும் மிகவும் கவனமாக கூட்டத்தை அனுமதிக்க வேண்டும்,
குறிப்பாக ஏழாவது பாயின்ட்டில் எங்கேயெல்லாம் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 5 சதவீதத்திற்கு மேல் இருக்கிறதோ அங்கு மட்டும் தான் கட்டுப்பாடுகள் ரொம்ப கண்டிப்பாக இருக்கணும். 5 சதவீதத்திற்கு கீழே எங்கெல்லாம் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் குறைவா இருக்கோ அங்க எல்லாம் நீங்கள் தளர்வுகள் செய்யலாம் என சொல்லியிருக்கிறார். தர்மபுரியில் தான் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கு 2.4%. தமிழ்நாட்டில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் குறைவாக இருக்கிறது சேலம் 0.2 சதவீதம்.
தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கக்கூடிய தர்மபுரி மாவட்டமே 2.4 சதவீதம், மத்திய அரசு சொல்லியிருக்கிற 5 சதவீதத்திற்கு கீழே இருக்கு. எந்த தேங்காயை உருட்டி எந்த கோவிலில் தேங்காய் உடைப்பதற்கு சேகர் பாபு ஐடியா பண்றான்னு எனக்கு தெரியல. இந்த ஆர்டரில் மிகத் தெளிவாக 7ஆவது பாயின்ட் தெளிவாக இருக்கிறது. மக்களிடம் பொய் சொல்வதை மட்டுமே ஒரு பிழைப்பாக நம்முடைய அமைச்சர் வைத்திருக்கின்றார் என அண்ணாமலை தெரிவித்தார்.