Categories
தேசிய செய்திகள்

7வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்….. தற்செயலாக விழுந்தாரா?…. இல்ல தற்கொலையா?…. போலீஸ் தீவிரம்….!!!!

குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்தார்.

ஹரியாணா மாநிலம் குருகிராமில், வெள்ளிக்கிழமை 15 வயது சிறுவன், தான் வசித்து வந்த கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ளதாவது செக்டர் 45இல் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர், தற்செயலாக விழுந்தாரா அல்லது பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சிறுவன் காலை 8.30 மணியளவில் தனது குடியிருப்பில் இருந்து பள்ளி பையுடன் வெளியே வந்தபோது சந்தேகத்திற்குரிய வகையில் பால்கனியில் இருந்து விழுந்தான். சத்தம் கேட்டு பாதுகாவலர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். காயமடைந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிணவறையில் வைத்தனர். மேலும், சிறுவன் கேரளாவை சேர்ந்தவர். அவரது மூத்த சகோதரர் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்படத்தக்கது.

Categories

Tech |