இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவின் ஏழாவது வந்தே பாரத் ரயில் சேவை மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்பட உள்ளது . அதன் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த வந்தே பாரத் சேவை டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி குடியரசு தொடங்கி வைக்கிறார் .வந்தே பாரத் ரயில் சேவைகள் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கினாலும் விரைவான பயணத்தை ஏற்படுத்துவதால் பயனர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது