பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் படையெடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் குள்ளம் பாளையத்தில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு 500க்கும் மேற்பட்டோர் படையெடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் வெள்ளாளபாளையம் எனும் இடத்தில் காவல்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டனர். அதாவது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வெயிட்டேஜ் முறையின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். எனினும் தேர்ச்சி பெற்று எட்டு வருடங்கள் கடந்த நிலையில் தற்போது வரை அவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படவில்லை.
மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களின் சான்றிதழ்களை ஏழு வருடங்கள் மட்டுமே உபயோகிக்கலாம். எனவே கடந்த ஏழு வருடங்களாக பணி நியமனத்திற்காக இவர்கள் காத்திருக்கின்றனர்இது தொடர்பில் ஆசிரியர்கள் கூறியுள்ளதாவது, கடந்த 7 வருடங்களாக பணி வாய்ப்பை இழந்து தவித்து வரும் எங்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்குவதற்கான உரிய நடவடிக்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து மன்றாட போகிறோம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அதிகாலையில் வெளியூருக்கு சென்று விட்டார். இதனால் அவரின் வருகைக்காக ஆசிரியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.