Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

7 ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை…. கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் கடை மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்துகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து திருவாரூர் நேதாஜி சாலையில் இருக்கும் வணிக வளாகத்திற்கு சொத்துவரி கட்டவில்லை. இதனால் நகராட்சி அதிகாரிகள் பலமுறை கடிதம் அனுப்பியும், இரண்டு முறை நேரில் சென்றும் வரி கட்டுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனாலும் தற்போது வரை சொத்து வரி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் 7 வருடங்களாக சொத்து வரி செலுத்தாத வணிக வளாகத்தில் இருக்கும் கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் நீண்ட காலம் சொத்துவரி மற்றும் தொழில் வரி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |