கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு தற்போது கங்கை நீரின் தரம் குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளதாக தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கோவில்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றுக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று கங்கையிலும் நீராடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கங்கை நீரின் தரம் குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளதாக கங்கை தூய்மை இயக்கத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெல்லியில் பேசியதாவது: கடந்த 2014ஆம் ஆண்டு கங்கை நதியில் முப்பத்தி இரண்டு இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் நீர் இருந்தது, தற்போது 68 இடங்களில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜன் அளவை வைத்து அதன் தரம் நிர்ணயிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.