சினேகன்- கன்னிகா இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன் இணைந்து எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராப், பருத்திவீரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்தவர் சினேகன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார் .
என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது🚶♀️🚶♂️
முதல் புகைப்படம்📷 2014🗓
வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க💐 கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்🍫
அன்புடன்
கன்னிகா சினேகன் #kannikaravi pic.twitter.com/esGBc2wAls— கன்னிகா சினேகன் @Kannika snekan (@KannikaRavi) July 31, 2021
இதை தொடர்ந்து சினேகன்- கன்னிகாவுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு பின் கன்னிகா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது . வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க. கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்’ என பதிவிட்டு ஏழு ஆண்டுகளுக்கு முன் சினேகனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .