Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

7 காவல் கோட்டங்களில் பணியாற்றிய…. 26 தனிபிரிவு போலீஸ் அதிரடி மாற்றம்…. சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு….!!

துணை காவல்கோட்டங்களில் பணியாற்றி வந்த 26 தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகளை வெவ்வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 7 துணை காவல்கோட்டங்கள் உள்ளது. இந்த 7 காவல் கோட்டங்களில் 26 தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களை வெவ்வேறு காவல்நிலையங்களுக்கு மாற்றம் செய்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் மாவட்டத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக பணியாற்றிய 15 தனிப்பிரிவு காவல்துறையினரை வெவ்வேறு காவல்நிலைய தனிப்பிரிவு காவலர்களாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீதமுள்ள 11 பேரை பல்வேறு காவல்நிலைய பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Categories

Tech |