Categories
தேசிய செய்திகள்

7 கொள்ளையர்…. ரூ.1,28,00,000 பணம்…. 60 செல் போன்… 14 பைக் பறிமுதல்… அதிரடி காட்டிய தெலுங்கானா போலீஸ்…!!

ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானாவில் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொள்ளையர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம், வாகனங்கள், புதிய வகை போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஏழு பேர்களில் முகமது அப்சார், மிர்சா அஸ்வக், முகமது அமீர், இம்ரான் மற்றும் ரெஹ்மான் என்ற ஐந்து பேரும் சேர்ந்து ஐதராபாத்தில் ரியல்எஸ்டேட் உரிமையாளரான அகமது என்பவரின் வீட்டில் இருந்து ரூபாய் 2.5 கோடி பணத்த கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதைப் போல் மற்றொரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள பையதுல்லா கான் மற்றும் சையது மஹபூப் அலி ஆகியோரிடமிருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்புடைய 57 புதிய வகை ஸ்மார்ட்போன்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள்,3 செல்போன்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மற்றொரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கடேஷ் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோரிடமிருந்து 12 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |